2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

‘நீங்களே உறுதியான நல்ல மனிதன்’

Editorial   / 2017 டிசெம்பர் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் ஒரு நல்ல செயலை, உங்களுக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் போது, அதனை மட்டுமே கருத்தில் கொண்டு, பிறசிந்தனைகளை உள்நுழைய விடாமல் பாதுகாத்தால், நீங்களே உறுதியான நல்ல மனிதன்.

சிந்தனைகளைச் சிதறவிட்டால், எக்காலத்திலும் கருமங்களைச் செப்பமாகச் செய்யமுடியாது. வைத்தியர் கத்தியை உடலினுள் வைத்துத் தைத்துவிடுவதும், அவரைச் சுற்றியுள்ள உதவியாளர்களும் கவனம் சிதறித் தவறிழைப்பதும் கொடுமையோ கொடுமை.

எனவே, கூட்டுக்கடமையில் ஈடுபடும்போது, தனித்து ஒருவரை மட்டும் குற்றம் சுமத்துவதும் நல்லது அல்ல; அமைச்சரவையில் அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்பை, எந்த அமைச்சர்கள் கௌரவப்படுத்துகிறார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

அவரவர்கள் தங்களது கடமைகளை ஆத்மார்த்த ரீதியில் செம்மையாகச் செய்தால் போதும்.

கடமை செய்தலே பேரானந்தம்; இறைவன் தருவான் பெரும் பேறு.

 

வாழ்வியல் தரிசனம் 20/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X