2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

நிறைவாழ்வு வாழ்வது எப்போது?

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 06:00 - 0     - 112

எல்லாவற்றையும் இழந்தபின் ஒருவருக்குத் தேறுதல் சொல்லப் பலர் புறப்பட்டு விடுவார்கள். அவன் இழப்பை உடன் நிறுத்த எத்தனை பேர் வந்தார்கள் என்பதே கேள்விக்குரிய விடயம்.

ஒரு மனிதன் அவலப்படும்போது, பலர் மறுபக்கம் திருப்பிப் போவதால், இழப்பின் தாக்கத்தை அவனேதான் அனுபவிக் வேண்டும். பிறர் வாழ்க்கையைத்தான் திரைப்படம்போல் இரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் தாம் பார்க்கும் திரைக்கதைக்குள்ளும் தங்களைப் போன்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஏனோ தெரிந்துகொள்வதில்லை.

கரிசனையை தனக்கு மட்டும் காட்ட வேண்டும் என அங்கலாய்ப்பவர்கள், கொஞ்சம் திரும்பித் தன்னால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகள் பற்றிக் கருதுவது கிடையாது.

காசுக்காரன் கல்யாணத்துக்குத் தொண்டுவேலைகள் செய்ய, சில பிரமுகர்கள் கூடப் பிரியப்படுகிறார்கள். எதனை, எப்படி, எவ்வண்ணம் வருவது என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஏழைகளை இரட்சிக்கக் கடவுளுடன் கூட வருவது, அவர்களைத் தெரிந்த வலிமைமிகு ஏழைகளும்தான்.

ஏனெனில், தேறுதுல் அளிக்க, இவர்களைப் போன்ற ஜீவன்களால்த்தான் முடியும். ஏழைகளுக்கு ஏழ்மைஒரு நிரந்தரப் பதவியாக கஇருக்க வேண்டும் என எண்ணும் குறுநெஞ்சக்காரர்கள் நிறைவாழ்வு வாழ்வது எப்போது?    

வாழ்வியல் தரிசனம் 18/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X