Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்கின்ற வயதில், வயது வந்த மாணவர்கள், எதையெதையோ கற்கிறார்கள். படிக்க வேண்டியவை மலையளவு இருக்க, படிக்கக்கூடாதவற்றைத் தேடி அலைகிறார்கள்.
உள்ளத்தில் நல்ல விடயங்களைப் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், வாலிபர்கள் தங்கள் செல்லிடத் தொலைபேசியில் என்றுமே மறக்கக்கூடாத, விடயங்களைப் பதிவுசெய்து, பார்த்து, கேட்டு இரசிக்கிறார்கள். இதுபோதாதென்று, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
தகாதவைகளைத் திணிப்பதுபோல், பிறிதொரு பாவம் இல்லை. வசதிகளைக் கொடுத்துப் பிள்ளைகளைச் சீரழிக்கும் பெற்றோர், நவீனமயமாக்கலுக்குள் புகுந்து, தங்கள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைப்பதில் பெருமை கொள்கின்றார்கள்.
இந்தச் சடப்பொருள்களின் மீதான மோகம் நீங்கட்டும். மனிதனுக்குத் தேவையானதை மட்டும் பெறுவதில் தவறு கிடையாது. தங்கள் ஆன்மாவுக்குக் கறுப்புச் சாயம் பூசுவது, துன்பமான கேட்டைத்தரும். நல்லவை எல்லை கடந்தவை.
வாழ்வியல் தரிசனம் 09/03/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago