Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்ய ஆரம்பியுங்கள்.அதன்பின்னர் தொடர்ந்தும் நல்ல கருமங்கள் செய்ய வாய்ப்புகள் உருவாகிப் பின்தொடரும். ஒரு கெட்டவன் தீய செயலைச் செய்தால், அவனைத் தொடர்ந்து வரும் சிக்கல்கள், பேரிழப்புகள் சொல்லில் அடங்காது.
நாங்கள் செய்ய ஆரம்பிக்கும் நல்ல காரியங்கள், எங்கள் எண்ணங்களின் வலுவால், எந்த இடர்களையும் உடைத்து எறியும். திடீரென வெற்றிபெற, வாழ்க்கை ஒரு திரைப்படக் கதையல்ல.
நாங்கள் மெருகேறக் காலம், கொஞ்ச அவகாசம் கேட்கிறது. நீ, சீர்மையான அனுபவங்களைப் பெறுவதற்கே, இந்தக் கால அவகாசமாகும். எனவே, வெற்றிகளைக் குவிக்க நிதானம், பொறுமை அவசியமாகும்.
நல்ல நோக்கம், நல்ல மனதில் இருந்தே உருவாகும். எனவே, எண்ணங்கள்தான் செய்யும் தொழிலுக்கு முதலாவது மூலதனமாகும். இது பொருளைவிட மேலானது.பணம் படைத்தவர் பத்துப் பணக்காரரை உருவாக்க மாட்டார். நல்லவர்களால்த்தான் பத்து நல்லவர்களை உருவாக்க முடியும்.
வாழ்வியல் தரிசனம் 23/04/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
58 minute ago
1 hours ago