2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நல்ல சந்திப்புக்களை நழுவிடக் கூடாது

Princiya Dixci   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல நண்பர்களை, பெரியோர்களைச் சந்தித்தால் அவர்களுடன் மீண்டும், மீண்டும் தொடர்புகொள்ள மனம் நாடும். இந்தச் சந்திப்புக்களை நழுவிடக் கூடாது.

இத்தகையவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறுவதே சந்தோஷகரமான விடயம்தான். இந்தப் பரிமாற்றங்களை ஸ்திரமாக்க இப்போது தானே பல வழிகள் உண்டு அல்லவா.

அலைபேசியூடான தொடர்பு, பேஸ்புக், மின்னஞ்சல், ஊடகங்கள் வாயிலான அறிமுகம் மற்றும் இணையத்தளங்களினுடான வழிகளால், தொடர்பாடல்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளலாம்.

அறிமுகமேயற்ற, அவர்கள் பற்றிய நடத்தைகளை அறியாது எந்தத் தொடர்புகளையும் தொட்டுவிடவேண்டாம். இத்தகையோர்களுடனான, சந்திப்பே பிறர் எம்மை நிந்திக்கும் நிலையினை ஏற்படுத்தி விடலாம்.

முகநூல் நட்பினால் மோசம் போனவர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். தேவையற்ற சந்திப்புக்களால், சிந்தை நோவடைதலாகாது.

வாழ்வியல் தரிசனம் 17/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .