Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது திருமணத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்பது, ஒவ்வொருவரது கனவாகும். திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு விட்டால், நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்தே அதற்கான ஆயத்தத்தில் இறங்கிவிடுவர். குறிப்பாகப் பெண்கள், தங்களது உடல் குறித்து அதிக கவனஞ்செலுத்துவர்.
திருமணத்துக்குத் தயாராகும் பெண்களை, உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளுமாறே, அழகுக் கலை நிபுணர்களும் ஆலோசனை வழங்குவர். அவ்வாறாயின், உங்களது திருமண நாள் நிச்சியக்கப்பட்டு விட்டதா? உடலை எவ்வாறுக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
ஆறு மாதங்களுக்கு முன்பிலிருந்து ஆயத்தமாதல்
காலை தேநீர்; 5-6 பாதம் நனைக்கப்பட்ட பச்சைத் தேநீர் அருந்தவும்
காலை உணவு; இட்டிலி சாம்பாருடன் ஓட்ஸ் உண்ணலாம் அல்லது முட்டை வெள்ளைநிறக் கருவில் செய்யப்பட்ட ஒம்லட்டுடன் ஒரேஞ் பழச்சாறு உண்ணலாம்
சிற்றுண்டி; நிலக்கடலை செலட், கொண்டைக்கடலை செலட் அல்லது முளைக்கட்டிய பயறு செலட்
மதியநேர உணவு; பருப்புடன் ரொட்டி அல்லது ஒரு கைபிடி தானிய உணவு
இரவு நேர உணவு; வாட்டிய அல்லது வறுத்த கோழி இறைச்சியுடன் கிழங்கு மசியல், வாட்டிய அல்லது வறுத்த மரக்கறிகளுடன் கிழங்கு மசியல், பருப்புடன் ரொட்டி
மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து ஆயத்தமாதல்
காலை தேநீர்; 5-6 பாதாமுடன் பச்சைத் தேநீர் (Green Tea) அருந்தவும் அல்லது வாழைப்பழத்துடன், பச்சைத் தேநீர் அருந்தலாம்
காலை உணவு; இட்டலி, சாம்பாருடன் ஓட்ஸ் உண்ணலாம் அல்லது முட்டையின் வெள்ளைக் கருவில் செய்யப்பட்ட ஒம்லட்டுடன், கோதுமையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஓர் உணவை உட்கொள்ளலாம்.
சிற்றுண்டி; தயிர், கீரைகளால் தயாரிக்கப்பட்ட செலட்
மதியநேர உணவு; பருப்பு அல்லது சுண்டலுடன் (சப்ஜி) ரொட்டி அல்லது சோறு
இரவு நேர உணவு; அவித்த முட்டை அல்லது கொண்டைக்கடலை செலட் அல்லது மரக்கறி செலட்
ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்து ஆயத்தமாதல்
காலை தேநீர்; வாழைப்பழம் அல்லது ஓர் அப்பிளுடன் பச்சைத் தேநீர் அருந்தவும்
காலை உணவு; தயிர் கலந்த வாழைப்பழ ஜூஸுடன் பாதாம் பருப்புகள் அல்லது அவித்த இரண்டு முட்டைகள்
சிற்றுண்டி; நிலக்கடலை செலட்
மதியநேர உணவு; பருப்பு அல்லது சுண்டலுடன் ரொட்டி அல்லது சோறு
சிற்றுண்டி; மோர் அல்லது ஒரு கைப்பிடியளவு தானிய உணவு
இரவு நேர உணவு; வாட்டிய மரக்கறிகளுடன் சோறு (தேவையெனில் கோழி இறைச்சி அல்லது மீன் எடுத்துக்
கொள்ளலாம்) அல்லது இரு ரொட்டிகளுடன் பருப்பு அல்லது சுண்டல்
10 நாள்களுக்கு முன்பிலிருந்து தயாராதல்
காலை தேநீர்; பச்சைத் தேநீர்
காலை உணவு; பப்பாசிப் பழம் அல்லது வாழைப்பழம் அல்லது
கீரை ஜூஸ்
சிற்றுண்டி; அவித்த இரண்டு முட்டைகள் அல்லது கொண்டைக்கடலை செலட்
மதியநேர உணவு; பருப்பு அல்லது சப்ஜியுடன் ரொட்டி அல்லது சோறு
சிற்றுண்டி; ஒரு கிளாஸ் மோர்
இரவு நேர உணவு; (இரவு 7.30 மணிக்கு முன்னர் என்பது கட்டாயமானது) வேக வைத்த கோழி இறைச்சியுடன் செலட் அல்லது பருப்புடன் சுண்டல் அல்லது செலட்
பொது அறிவுறுத்தல்கள்
இரவு நேர உணவை, 7.30 மணிக்கு முன்னர் உண்ணுதல் அவசியம்.
தினமும் 45 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வது அவசியம்.
மூன்று மாதங்களின் பின்னர், விரைவு உணவு உண்ணுவதைத் தவிர்க்கவும்
திருமணத்துக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்குமாயின், விரைவு உணவுகள் உண்ணுவதை அறவே தவிர்க்கவும்.
தினமும் குறைந்தது, 2 லீற்றர் தண்ணீர் அருந்தவும்.
மதுபானம் அருந்துவதைத் தவிர்க்கவும். மதுபானம் அருந்துவதால் முகத்தின் அழகு கெடும்.
மகிழ்ச்சியுடன் இருக்கவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago