2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

‘தர்மம் செய்யப் பிரியப்படுவீர்களாக’

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 06:00 - 0     - 104

நற்கருமங்கள், உங்கள் மூலம் பிறருக்குச் செய்விக்கப்படுவதனால், அது உங்களுக்கு இறைவனால் அளிக்கப்படும் பெரும்​ கௌரவமாகும்.  

எனவேதான், தர்மம் செய்யப் பிரியப்படுவீர்களாக. உலகின் செல்வங்கள் யாவும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். 

 ஆனால், இன்று இந்நிலை இல்லை. எல்லாமே வலிமைமிகு செல்வந்தர்கள் கரங்களுக்குள் சென்றுள்ளன.  

‘கரங்களை விரித்துக் கொடை செய்யும் கருணையைத் தா’ என நாம் கடவுளிடம் கேட்கவேண்டும்.  

பாவிக்கப்படாத சொத்துகள் வெறும் குப்பைக்குச் சமமானது. அதை அனுபவிக்கச் செல்வந்தர்களுக்கோ அவர்களின் சந்ததியினருக்கோ ஆயுள் போதாது. இருக்கும் ஆயுளில் எதைச் சாதிக்க வேண்டும் என எண்ணினால், கொடை செய்வதே ஒரே வழி. இந்தப் பிறவியே உண்மை. அத‌ற்குள் பிறருக்கு உதவுதலே, பெரும் கடமை என உணர்க. 

     வாழ்வியல் தரிசனம் 03/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X