2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

‘செறிவான வார்த்தைகள் மனதை வைராக்கியப்படுத்துகின்றன’

Editorial   / 2018 மே 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேச்சுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை, தங்கள் செயலுக்குக் கொடுக்காமல் விடுவது அரசியல்வாதிகளுக்கான தனிப்பட்ட குணமாகும். இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாது. 

ஆனால், ஒரு சாராசரி மனிதனின் ஆன்ம வலுவை, அதிகம் வாய் அசைப்பதன் மூலம், இழக்கச் செய்து விடலாம்.

நல்ல உபதேசங்களைப் பொழிபவர்கள் ஆழ்ந்து, உணர்ந்து, மௌனம் காத்துத் தங்கள் தேடல் மூலம் பேசும் சொற்கள், சமானியமானது அல்ல. அவர்கள் சொற்களே எங்களைச் செயல் வீரர்களாக்கும் வல்லமைகளை ஈட்டித்தர வல்லது. ஒருவரைத் தட்டி எழுப்பும் திறன், நல்ல பேச்சாளனுக்கு உண்டு. இத்தகையவர்கள் தங்கள் ஆன்மாவுடன், எதிரில் இருக்கும் மாந்தர்களின் அறிவை ஸ்பரிசித்து, ஈர்த்துக் கொள்வதால் அவை ஸ்திரமாக மனதில் உட்புகுந்து கொள்கின்றன. 

உணர்வுபூர்வமாக மனம்திறந்து, சொற்பெருக்காற்றினால் கருத்துகளைச் செயலுருப் பெறவைக்கும் வல்லமை தானே கைவரப்பெறும். 

செறிவான வார்த்தைகள் மனதை வைராக்கியப்படுத்துகின்றன.

வாழ்வியல் தரிசனம் 25/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .