Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நீ நீயாக இரு”. இதை, “நான் நானாக இருக்க வேண்டும்” எனும் கருத்துப்படப் பலர் பேசுகிறார்கள்.
ஒருவரைப் பார்த்து “நீ நீயாக இரு” என்று சொல்வது சரிதானா? கள்வன் ஒருவனைப் பார்த்து, “நீ நீயாக இரு” என்று சொல்லலாமா? நல்லவனாக ஒருவன் இருந்தால், “நீ நீயாக இரு” என்று சொல்லலாம். “நான் நானாக இருக்கிறேன்” என்றால், நான் ஒழுக்கம் உடையவனாக இருக்கிறேன் எனும் திடசங்கற்பத்துடன் வாழ வேண்டும்.
“எனக்குப் புத்திமதி சொல்ல நீ யார், நான் நானாகத்தான் இருப்பேன்” எனச் சிலர் வீம்பு பேசுவதுண்டு.
நாம், சீரும் சிறப்புடனும் வாழ்ந்திட, எம்மை மெருகேற்றியவர்களாக, சதாகாலமும் முனைப்புடன் இருக்க வேண்டும். இது ஒரு மனோதிடமூட்டும் வழிதான்.
எல்லா விதமான நல்லியல்புகளும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு இந்த இயல்புகள் பிறப்பிலேயே உண்டு. “நான் யார்” எனும் கேள்வியை, மமதையற்ற நிலையில் உணர்ந்தால், எங்கள் உண்மை இயல்பு பற்றி விளங்கிக் கொள்ள முடியும்.
மேலாதிக்க உணர்வுடன், ஒருவரை விமர்சித்து உரையாடுவது நாகரிகமல்ல; பெரியவர்கள், எங்கள் நலனுக்காகச் சொல்வதை ஏற்க வேண்டும். அவர்களுடன் தர்க்கித்தலாகாது. உலகம் என்ற பாடசாலையில், நாம் என்றும் மாணவர்கள்தான்.
வாழ்வியல் தரிசனம் 21/09/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
6 hours ago