Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழிபாட்டுத் தலங்களில் நாங்கள் இயந்திரத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. விட்ட பொருளைத் தேடுவதுபோன்று, அவசர அவசரமாக வழிபாடு செய்வதில் எந்தஅர்த்தம் இல்லை.
என்றும் பரபரப்பாக இயங்கும் இந்த உலகம், நாம் அமைதியை நாடி, ஆலயங்களுக்குச் செல்லும்போதும் கூட பரபரப்பு எதற்கு?
ஆலயம் என்பது ஆன்ம நிவேதனம் செய்யப்படும் புனித இடம். அதாவது எமது ஆன்மாவை இறைவனிடம் அர்ப்பணித்து, மனோ லயத்துடன் நிர்ச்சிந்தையுடன் இருப்பதுமாகும்.
தேர்தல் பிரசார மேடைபோல அதீத சப்தமும் ஆணவ மிடுக்குடன் உலாவருதலும் வெட்கப்படத்தக்க விடயங்கள் என்பதை உணரவேண்டும்.
கண்டபடி எந்தப் பொது இடத்திலும் நடந்து கொள்வதுகூட ஆத்ம நிந்தனைதான், தனது ஆன்மாவை அவகௌரவப் படுத்துதல் பிறரையும் அசௌகரியப்படுத்தவது போலாகும். கோவில் அமைதியின் புகலிடம்.
வாழ்வியல் தரிசனம் 05/12/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago