2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘குழந்தை மனம் இருந்தால், உலகம் எழிலாகத் துலங்கும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளை அழ வைத்து, வேடிக்கை பார்த்து இரசிக்கும் நபர்களின் செயல்களை, என்னவென்று சொல்வது?

குழந்தைகளுக்கு வலிக்குமாறு கிள்ளுவது, அவர்களின் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களைப் பறிப்பது போன்ற, ஏக ரகளை செய்யும் இவர்கள், குழந்தைகளின் அழகை இரசிக்கத் தெரியாதவர்கள். அத்துடன், இங்கிதம் சற்றேனும் இல்லாத கோமாளிகள் ஆவார்.

குழந்தைகள் எந்தப் பொருள் மீதும், நிரந்தரமாக ஆசைகளை வைத்திருப்பதில்லை. சில நாள்கள், ஒரு பொம்மையை வைத்து விளையாடுவார்கள். பின்னர், அதை விட்டு, வேறு விளையாட்டுப் பொருள்களை விரும்பி  எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால், சமான்ஜமானவர்கள் எல்லோருமே எதையும் துறக்கப் பிரியப்படுவதில்லை. மிகவும் பழைய பொருட்களையும் விட்டு வைப்பதில்லை.

பெரியவர்களுக்கு உள்ள பலவீனங்கள், சின்னஞ்சிறுசுகளுக்கு இல்லவே இல்லை. அவர்களிடம் இருக்கும் ஒரே பண்பு, அனைவரையும் தோழமை கொள்வதுதான்.

என்றும் குழந்தை மனம் இருந்தால், உலகம் எழிலாகத் துலங்கும்.

வாழ்வியல் தரிசனம் 15/10/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X