Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் நேர்மையான மனிதர்கள் கூடச் சந்தர்ப்ப வசமாக அல்லது தெரியாத்தனமாகச் சொன்ன ஒரு சிறுபொய், அவர்கள் மீதான நல்ல அபிப்பிராயத்தில் களங்கம் ஏற்படுத்தி விடலாம்.
இதை மிகைப்படுத்தவே, சில கூட்டம் காத்திருக்கும். தவறு செய்தவர் மன்னிப்புக் கேட்டாலும் அதைச் செவிமடுக்க மக்களை அனுமதிக்கவும் மாட்டார்கள்.
எனவே, நல்லவராக வாழ வேண்டும் எனத் திடசிந்தை கொண்டவர்களையும் நிலைதடுமாற வைக்கும் சந்தர்ப்பத்தை வேண்டும் என்று திணிக்கப்படுவது அனுதாபத்துக்குரியதே.
தவறுகள் தெரியாத்தனமாகவும் வாழ்க்கையில் புகுந்து கொள்கின்றன. நாங்கள் மனிதர்கள்; சர்வ ஜாக்கிரதையாக இருந்தாலும் ஆடையில் கறைபடிவதுண்டு.
எனவே செய்த தவறை உணர்ந்து, தொடர்ந்து எம் சித்தப்படி நேர்மையுடன் வாழ்வதே அழகு. புல்லர்கள் புகழ்வதையும் இகழ்வதையும் செவிகளில் ஏற்கக் கூடாது. சிந்திக்காது குற்றம் சுமத்துதல் அநீதி.
வாழ்வியல் தரிசனம் 01/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .