Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘எனது வாழ்க்கை வரைபடத்தில் முழுஉருவான அன்பரே! தங்கள் திருப்பாதத்தை அனுதினமும் நெஞ்சக் கமலத்தில் நினைந்துருகும் அடியாள் நான். என்மூச்சோடு கலந்து சுவாசிக்கும் சுவாசமே தாங்கள்தான். எனது எண்ணங்கள் உங்கள் இதயத்துடன், சங்கமிக்க இல்லையா? நான் தூதுவிடும் நினைவுப் பூக்கள், உங்கள் நெஞ்சத்தில் இன்னும் ஸ்பரிசிக்கவில்லையா?’
இது அன்றைய காதலி, தனது காதலன் மீதான மையலில் தனக்குள் தானே உணர்ந்தவை.
இன்றைய காதலி, தனது காதலனை இப்படிச் சொல்வாள். “டேய் என்ன, என்ன திமிராய் பேசுறாய்? என்மீது இஷ்டமில்லாமலா சும்மா சுத்திச் சுத்தி வாறாய்? சேட்டை விட்டாயோ, உன்னைக் கடித்துக் குதறிவிடுவேன்; சும்மா நடிக்கிறாயா?”
இதற்குப் பதிலாக அவன் சொல்கிறான். “அடி சரிதான் போடி; சும்மா பாத்தால் பெரிசாப் பேசுறியோ? சரி.. சரி சண்டையிட்டதுபோதும் இன்றைக்கு கடற்கரைக்குப் போவோமா? கோவிக்காதேடி”
காலமாற்றம் பேச்சுகளையும் எண்ணங்களையும் மாற்றியபடி உள்ளது.
வாழ்வியல் தரிசனம் 11/12/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago