2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

‘காதலின் வெற்றி, முதுமையில் துலங்கும்’

Editorial   / 2018 மே 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலுக்குப் பொய் சொல்வதுதான் அழகு. காதலியைச் சமாதானம் செய்யக் காதலன் சொல்லும் பொய்கள் மிக வேடிக்கையாக இருக்கும். அவை பொய் என அவள் உணர்ந்தும் கூட, பொய்க் கோபம் பூண்டு, அவள் மனத்துக்குள் எல்லையற்ற மகிழ்வெய்துவதும் பொய்யல்ல. 

தனக்காகக் காதலி சொல்லும் பொய்யையும் அவள் படும்பாட்டையும் குறுகுறு விழிகள், துடிக்கும் இதழ்களுடன் குறும்பான செய்கையையும் இரசிக்காமல் இருக்க முடியுமா? 

அன்பு உள்ளம் கொண்டவர்கள் செய்யும் எந்தக் காரியங்களுமே, இரசனைக்குரியதுதான். காதலர்கள் சின்னக் குழந்தைகளாகச் செயற்படுவதுகூடப் புதுமையல்ல. 

இவர்களின் ஊடல்கள், பரிகாசங்கள், சேட்டைகள் ஆகியவற்றைக் காலம் கடந்த பின்னர் நினைத்து, தமக்குள் உள்ளூர மகிழ்வெய்துவதும் வயது முதிர்வதும் தங்கள் காதல் வாழ்வை இறுதிக்காலம் வரை தொடர்வதும் அன்புக்குக் கிடைத்த, அதுவே பெருமைகொள்ள வைக்கும் வெற்றிதான். காதலின் வெற்றி, முதுமையில் துலங்கும்.

வாழ்வியல் தரிசனம் 03/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .