2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

‘ஒழுக்கமான பிள்ளைகளையே உலகம் விரும்பும்’

Editorial   / 2018 மே 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளுக்கும் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியமானது. இவ்வாறு இன்றேல், இவர்களினூடாக குடும்பப் பிணைப்பு படிப்படியாக விலகுவதற்குக் காரணமாகிவிடும். 

இன்று இளைஞர்கள், யுவதிகள் பலர், கேட்பாரின்றி தங்கள் ஒழுக்க வாழ்வை, உடைத்து வருகின்றமையைச் சகலரும் அறிவார்கள். இஷ்டப்படி இவர்கள் வாழ்வதற்கு, இவர்கள் வாழ்ந்த குடும்ப அமைப்பும் சூழ்நிலையும் தான் காரணமாகின்றன. 

பண்பாடு அறியாமல் கண்மூடித்தனமாக இயங்கும் நிலை உருவாகக் கூடாது. பிள்ளைகளின் தவறுகள் பெற்றோருக்குப் புரியாமல் இருக்கின்றன. தெரிந்தும் அதை மறுக்கும் தாய், தந்தை, பின்னர் மனம் நொந்து போகின்றனர். 

இல்லங்கள் அன்பையும் பண்பையும் வளர்க்கும் அதிமுக்கிய கேந்திர நிலையங்களாகும். கட்டுப்பாடும் ஒழுக்கமும் அழுத்தமாகப் பிரயோகிக்கப்படும் ஸ்தானம் அதுதான். ஒழுக்கமான பிள்ளைகளையே உலகம் விரும்பும்.  

வாழ்வியல் தரிசனம் 07/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .