Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘நான் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவன்’ எனப் பெருமைப்படுவதைவிட, நான் அருளாளர் குடும்பத்தின் வழித்தோன்றல் என எண்ணுதலே அதியுயர் கௌரவமாகும். பரம ஏழையும் அருளாளனாக வாழ்கின்றான்.
ஒழுக்கமான குடும்பம் உயர்வடையும். இங்கிருந்து புறப்பட்ட வம்சம், தங்கள் பெருமைகளை நிலைநாட்ட வேண்டும்.
இருப்பினும் எந்தவிதமான குடும்பப் பின்னணியும் இல்லாதவர்கள்கூட, உயர் குணங்களைக் கொண்டவர்களாக, வாழ்ந்து உலகில் உயர்ந்தும் வருகின்றனர். பேதமை பேசுதல் அவமானம்.
பிறப்பு நடந்த குடும்பச் சூழ்நிலையை, மட்டும் கருதாமல் ஒருவர் நல்ல சூழல், அதனோடு இணைந்த நல்மக்களுடன் இணைந்தால் பண்பு நிலை தானாக உருவாகும். இது இயற்கை நியதி.
கால ஓட்டத்தில் நல்லவை, கெட்டவை மாறிமாறி நடைபெறும். பழைமைக் கதை கேட்டு, உயர்ந்த நிலையில் வாழும் நல்ல மனிதரை, இகழக்கூடாது. உலகம் பொதுச் சொத்து.
வாழ்வியல் தரிசனம் 09/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .