Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதியவர்களே அனுபவங்களின் தொகுப்பாளர் ஆகின்றனர்.
காலங்கள் கடந்துபோகும்போது, பெற்ற அனுபவ ஞானங்களும் கூட, வந்த வண்ணமிருக்கும்.
இவர்கள் சொல்லும் அனுபவக் குறிப்புகள், இளைஞர்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.
சிலவிடயங்களைச் ஜீரணிப்பது கஷ்டம்தான். நல்ல விடயங்களைக் கடைப்பிடிப்பது, பலருக்கு அது ஒரு தொந்தரவான சங்கதிகளாகவும் கருதப்படலாம்.
தாங்கள் சார்ந்த மதக் கோட்பாடுகள், பண்பாட்டு விடயங்களில் வயதானவர்கள் விட்டுக் கொடுக்காமல் தீவிரமாக ஆர்வம் காட்டுவது அவர்களின் குணநலனாகும், அவர்கள் கோட்பாடுகள், பண்பாட்டு விடயங்களில் செயலுருவில் காப்பாற்றாது விட்டால் எமது நிலை என்னவாக மாறிவிடும் எனச் சற்றே சிந்தியுங்கள்.
அதுமட்டுமல்ல, இன்று நாம் பெருமையுடன் பேசிக்கொள்ளும் பாரம்பரியங்களைக் காப்பாற்றி, வருபவர்கள் இவர்களன்றோ. இளைஞர்களும் முதியவர்களாவர்; அப்போதுதான் உண்மைநிலை புரியும்.
வாழ்வியல் தரிசனம் 25/12/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago