Princiya Dixci / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பரத்தை இவள்' என்று நெருப்பணைய வார்த்தைகளை அருவருத்துப் பேசும் சில நபர்கள், இரவில் வந்து கரைந்து, அவள் மடியில் துவளுவது அநியாயம்.
இரவில் விழித்தும் பகலில் அழுதும் காலத்தையும் தேகத்தையும் தொலைத்து உழலும் இந்தப் பெண்களின் துன்பத்தை உலகம் அறிவதுமில்லை; தெளிவுடன் நோக்குவதும் இல்லை.
இருளுக்குள் இரை கௌவும் கௌரவமற்ற கொள்ளையர்களுக்கு ஏது புது இதயம்? இவளைச் சுகிர்ப்போருக்கு இவளின் சகிப்புத்தன்மை புரியாது. நகைப்போடு காசை வீசி தலைறைவாய் ஒளிந்து கொள்வார்கள்.
வேசி என்று கூசாமல் கைவைப்போர், தேகத்தின் மோகத்தால் அழிவெய்தும் துஷ்டபோக்கிரிகள். விலைமகள் என்பவள் காதல் இல்லாத ஜடப்பொருள் அல்ல! இதயம் இறுகினோர்களுக்கு மற்றவர் வலி எளிதாய்த் தோன்றும். இதயத்தை உழுதபடி அழுகின்றாள்; எழுந்து உயிர்கொடுக்க யார் உளர்?
வாழ்வியல் தரிசனம் 20/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025