2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்துக்கு யார் தண்டனை கொடுப்பது?

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை, இயல்பாகவே இந்தப் பூமிக்கும் அங்குள்ள மக்களுக்கும் உணவூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. 

ஆனால், இயற்கை தரும் அன்பளிப்புகளை நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. மழை நீரைச் சேமிப்பதில்லை; குளம், குட்டைகளை ஆழப்படுத்துவதுமில்லை. இவற்றைப் பராமரிப்பது யார்? 

டெங்கு வாழும் நீரையும் அகற்றுவதில்லை. தெருவில் வடிகானில், நீரை ஓடவிடாமல் தேங்கச் செய்வது யார்? தூர்வாரும் பணிகளை அரசாங்கம் கவனித்து வருகின்றதா? 

ஒரு சிரட்டையில் நீர் தேங்கி, அதில் நுளம்பைக் கண்டால், அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. குப்பை மேட்டைக் கவனிக்காமல், வடிகானைத் திருத்தாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு யார் தண்டனை கொடுப்பது? சுகாதாரம் இன்மையால் இன்னல்களே அதிகம்.

     வாழ்வியல் தரிசனம் 13/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X