Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறங்களில் மேலானது, கொல்லாமையாகும். அதனிலும் மேலானது, பிறரின் மனங்களைப் புண்படுத்தாமல் வாழ்வதாகும்.
ஒருவரை அடித்து வீழ்த்துவதை விட, சுடு சொற்களால் அவர் மனதை நோகடிக்கச் செய்வது பாவகாரியமாகும். இதனால், எவரும் நிம்மதி பெற்றுக் கொள்ளவே முடியாது. பிறரைச் சந்தோசப்படுத்துதல் தனக்கும் இனிமை கூட்டுவதாகும்.
உங்கள் கோபம், ஆணவத்தால் பிறரை எதிரியாக்குவது எப்படி நியாயமாகும். வலிந்து இடர்கள் வந்தால், பொறுமை காத்து விலகி நின்றால், உங்கள் கௌரவம் மேம்படும். சண்டித்தனம், கண்களிடத்தில் நியாயம், நீதிகளை மறைத்து, துஷ்டத்தனத்துக்கு அடிமையாக்கும். சிலரது பேச்சுகள் மூச்சுத் திணரவைக்கும். அன்பில்லாவிட்டால் நாக்கு நயம்பட உரைக்காது.
கேட்கக்கூடாதவைகளில் நாட்டம் கொள்ளற்க. இனியவை பேசி, மனதை இனிமையாக்கினால், பூக்களின் வாசனையாய் சொற்கள் மலர்ந்து விரியும்.
வாழ்வியல் தரிசனம் 22/05/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
6 hours ago