2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘அதீத அவசர புத்தி ஆபத்து’

Editorial   / 2018 ஜூலை 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது மூளையை நாம் மெருகேற்ற நீண்ட காலம் தேவைப்படுகிறது.

அனுபவங்களும் மக்கள் தொடர்பும் மக்கள் மீதான கரிசனைகளும் எங்களை என்றும் புதியவராகப் புடம் போட்டால், மினுங்கும் தங்கம்போல ஆக முடியும்.

எந்தத் தொழிலையும் உடன்கற்றுத் தேர்ச்சி பெற முடியாது.

எமது எண்ணங்களைப் பூரணமாகப் புனிதமாக்க, முதற்கண் நாமே விருப்பப்படவேண்டும்.

தியாகம் செய்யவும் போலிகளைத் துறக்கவும் அத்தியாவசியமான தேவையானவைகளை மட்டும் நிறைவேற்றும் ஆசைகளை வைத்திருக்க வேண்டும்.

எவற்றையும் வேண்டாம் என்று சொல்ல மனிதன் முட்டாளுமல்ல.

செய்ய வேண்டிய கருமங்களைச் செய்தால், பொருத்தமான ஆசைகளும் நிறைவேறியே தீரும்.

அதீத அவசர புத்தி ஆபத்தானது.

சீக்கிரம் செய்து முடிப்பதற்காக முறையற்ற, ஒழுங்கற்ற வேலைகளைச் செய்ய முடியாது.

நிதான புத்தி முழுமை தரும். 

வாழ்வியல் தரிசனம் 04/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X