2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

‘அடிமை ​கொள்ள எண்ணினால் ஒடுங்க நேரிடும்’

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓரினத்தின் மாண்புகளையும் பண்பாடுகளையும் இன்னோரு பலம்மிக்க இனம் சிதைக்கக்கூடாது. அப்படி எண்ணிச் செயற்பட்டால் சிதைக்கப்படும் இனம் பாதிப்படைவது மட்டுமல்ல, இந்த அடாத செயலைச் செய்யும் இனமும், அதன் தாக்க​த்தைப் பிறிதோர் அழுத்தங்கள் மூலம், பாரிய எதிர் விளைவுகளை எதிர் கொண்டேயாக வேண்டும்.  

இந்தப் புவனமே, ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டு, இந்தக் குடும்பத்துக்குள்ளேயே பொல்லா வினைகளைப் விதைப்பது நல்லதல்ல. 

மேற்கத்தைய நாடுகள், ஆதிக்க வெறியுடன் எமது நாட்டுக்குள் புகுந்து, செய்த அடாதவடித்தனங்கள் நாங்கள் அறியாதது அல்ல; எங்கள் நாட்டின் பாரம்பரிய கலாசாரங்களைச் சிதைக்க முனைந்ததன் பயன்தான் என்ன? 

இன்று வல்லரசுகள், தங்களைத் தாங்களே சுட்டுக்கொல்கின்றன. இது அவர்களாகத் தேடிய வினைப் பயன்; மீளமுடியாது. 

எந்த இனத்தையும் அடிமை ​கொள்ள எண்ணினால், அவர்களே ஒடுங்க நேரிடும்.

வாழ்வியல் தரிசனம் 15/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .