2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அசிங்கமான ரகசியம்

Gavitha   / 2014 டிசெம்பர் 20 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு பற்தூரிகையை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பற்தூரிகையை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 

அதுமட்டுமின்றி, உங்கள் பற்தூரிகை, கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு பற்தூரிகையில்100 மில்லியன் பக்டீரியாக்கள் வசிக்கின்றன.

 

வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பக்டீரியாவும் இதில் அடங்கும்.

 

உங்கள் பற்தூரிகையில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா? ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு பற்தூரிகையில் 100 மில்லியன் பக்டீரியாக்கள் வசிக்கின்றன.


ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி வசிக்கின்றன. பிரச்சினை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான்.

 

பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாயிலிருந்து பற்தூரிகைக்கு  இடம் மாறுகின்றன.

 

பற்தூரிகை மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது பற்தூரிகையில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை.

 

ஆனால் பற்தூரிகையை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

 

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் பற்தூரிகைக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

 

பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன.

 

அதனால் பற்தூரிகைகள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் பற்தூரிகையை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .