2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பால்நிலை வன்முறையை தடுக்க உதவும் கல்வி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்லுறவு, வீட்டு வன்முறை மற்றும் ஆணாதிக்கம் என்பன உண்மையான மனிதனின் செய்கள் அல்ல.

சராசரியான மனிதர் ஒருவர் உலகோடு ஒப்புரவாக முன்னேறுவதை ஒரு பெரும் சவாலாக எடுக்கும் அபிவிருத்தி சகாப்தமான 21ஆம் நூற்றாண்டில் பழங்கால, அறிவில்லாத, பால்நிலை அடிப்படையிலான அதிகாரம் இருக்காது என்பது அனைவரினதும் எண்ணமாகும். இது உண்மையல்ல. இந்த கணத்திலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஏதோ ஒரு வடிவம் சந்தேகமின்றி நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் தகவலுக்கு அமைய, 50 சதவீதமான பாலியல் வன்முறைகள் 15 வயது அல்லது அதனிலும் குறைந்த வயதுடைய பெண் பிள்ளைகள் மீது நடத்தப்படுகின்ற அதேவேளை, 150 மில்லியன் பெண் பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண்பிள்ளைகளும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட முறையில், என்னை பொறுத்த வரையில் பால்நிலை அடிப்படையிலான ரீதியில் நோக்கும்போது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கும் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என நம்புகிறேன்.

விழிப்புணர்வுக்கான இந்த அவசர தேவை மனதை உறைய வைக்கும் உண்மைகளாலும் புள்ளிவிபரங்களாலும்  நிரூபிக்கப்படுகின்றது. பால்நிலை அடிப்படையிலான, பெண்களுக்கு எதிரான வன்முறை, சமூக நியதிகள் மற்றும் வளர்ப்பு சிந்தனைகளில், குறிப்பாக  ஆண்கள் பெண்களுக்கு உரித்துடையவர்கள் என்ற அர்த்தமில்லாத நம்பிக்கையில் தங்கியுள்ளது. இது வன்முறைக்கும் பாகுபாட்டிற்கும் இட்டுச் செல்கின்றது.

சர்வதேச ரீதியாக பெண்களுக்கு எதிராக பரவியுள்ள நோயாக வன்முறை காணப்படுகின்றது. இது ஒழிந்து போகாத ஒரு நோயாக மாறியுள்ளது.

மனிதர்கள் என்ற வகையில் நாம் எமது முன்னுரிமை ஒழுங்கை குழப்பியுள்ளதுடன் மூன்று பெண்களில் ஒருவர் தமது வாழ்க்கையில் பாலியல் ரீதியில், உடல் ரீதியில், மனவெழுச்சி ரீதியில் துஷ்பிரயோகத்தை  அனுபவிக்கின்றனர் என்ற கொடூரமான உண்மையை அலட்சியப்படுத்தி மொளன நிலையில் இருக்க தீர்மானித்துள்ளோம் எனவும் நான் நம்புகின்றேன்.

ஆம்! நாம் இந்த பயங்கர நிலைமையை அலட்சியம் செய்கிறோம்.. ஆனால் மோன நிலை, அறியாமை எனும் எண்ணக்கரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரமே நின்று பிடிக்க முடியும். ஒரு காலத்தில், ஒரு நிலைமையில் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவராகவோ அல்லது நிர்க்கதியான பார்வையாளராகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்பவராகவோ இருக்கும் போது இவ்வாறான மோன நிலையிலும் அறியாமையிலும் சிறைப்பட்டிருந்தமை, உங்கள் வாழ்வின் மிகப்பெரிய பிழையெனவும் குறைப்பாடு எனவும் நீங்கள் உணர்வீர்கள். தனிப்பட்ட ரீதியில் எனது குடும்பத்தில் எனது அம்மா, எனது சகோதரி, மற்றும் நான் என மூன்று பெண்கள் உள்ளோம்.

எனவே மூன்று பெண்களில் ஒருவர் துஷ்பிரயோகம்  செய்யப்படுவாரென நான் நினைக்கும்  போது, இது எனக்கு அல்லது அவர்களில் ஒருவருக்கு நடக்க முடியும் என நம்பும்போது எனது நெஞ்சம் உறைந்து போகின்றது.

இதனால் வன்முறையை தடுப்பது சிக்சையை விட நல்லது என நான் நம்புகின்றேன். தடுப்பது வாழ்வில்  ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டும். மரியாதையான பரஸ்பர புரிந்துணர்வையும் பால்நிலை சமத்துவத்தையும் வளர்ப்பதற்கு  இளம் ஆண், பெண் பிள்ளைகளுடன் வேலை செய்து அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும்.

ஒரு தனியாளின் மனோபாவத்தை மாற்றுவதற்கு எமது விடயத்தில் பெண்கள் ஏதோ ஒர் வகையில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்லது பெண்கள் ஆண்களுக்கு உரித்தான பொருட்கள் என்ற எண்ணம் தொடர்பான தீர்வு இளைஞர்களிடமிருந்து வர வேண்டும். இளைஞர்களே மாற்றத்தை கொண்டு வருபவர்கள். புலன் வழி விளக்கத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்கள் இளைஞர்களே. இளைஞர்களால் சமூகத்தின் எஞ்சிய பகுதியினருடன் சேர்ந்து இதனை சாதிக்கவும் இந்த உலகை கூடுதல் பாதுகாப்பான, மனித நேய இடமாகவும் உருவாக்க முடியும். மனிதர்களிடம் மனித நேயம் இல்லாத போது பூரண அராஜகம், குழப்பம் தவிர வேறு எது எமக்கு கிடைக்கும்?.

உண்மையான மனிதன் துஷ்பிரயோகம்  செய்வதில்லை என்பது முழு சமூதாயத்தாலும் விளங்கி கொள்ளப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

வல்லுறவு, வீட்டு வன்முறை மற்றும் ஆணாதிக்கம் என்பன உண்மையான மனிதனின் செயல்கள் அல்ல. மனித இனத்தின் அபிவிருத்திக்கு தேவையான முக்கிய தூண்களாக பெண்கள் உள்ளனர் என்பதை அங்கீகரிக்க திராணியற்ற கோழையின் செயல்தான் அது.

பெண்கள் வன்முறை, துஷ்பிரயோகத்திலிருந்து சுதந்திரம் உட்பட மனித உரிமைகளை அனுபவிக்க முடியாது போனால் கணிசமான அபிவிருத்தி நோக்கிய முன்னேற்றம் பின்தங்கிவிடும்.

பால்நிலை வன்முறை ஒழிப்பு தொடர்பில் ஹிலாரி கிளின்டன் கூறும் போது,

இந்த நடத்தையை கண்டிப்பதற்கு அப்பால் எமது பொறுப்பை நாம் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும் இதை சமூக ரீதியாக  ஏற்புடையது அல்ல என ஆக்குவதற்கும் இது பண்பாடு அல்ல, இது குற்றச் செயல் என இனங்காணவும் வேண்டிய காலம் இது.

பால்நிலை எனும் அர்த்தமற்ற அடிப்படையில் எந்தவொரு தனி மனிதனும் பெண்ணும் பிள்ளையும் பாகுபாடு காட்டப்படாதிருப்பதையும், துஷ்பிரயோகம்  செய்யப்படாதிருப்பதையும், உரிமைகள் மீறப்படாதிருப்பதையும் உறுதி செய்ய நாம் இணைந்து  செயலாற்ற வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .