Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜி.எம். ரோகினி)
ஒரு மனிதனினுக்கு நிம்மதி கிடைப்பது என்றால் அவன் ஆழந்த உறக்கத்தில் மூழ்கும் போதுதான். அந்த துயில் இல்லாமல் போகுமென்றால் அது அவனது சந்தோசத்திற்கு கேடு விளைவிக்கும். அதேவேளை அவனை மனநோயாளியாகவும் மாற்றிவிடும்.
வேளைப்பளுவும் நேரமின்மையும் அதிகரித்துக் காணப்படும் இன்றைய வாழ்க்கையில் பலர் முதலில் தியாகம் செய்வது நித்திரையைதான்.
சுபீட்சமான எதிர்கால வாழ்க்கைக்காக, இளமைக் காலத்தை பணம் சம்பாதிப்பதற்காக தியாகம் செய்யும் இவர்கள், எதிர்கால வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஒரு மனிதனுக்கு தினமும் 7-8 மணித்தியால உறக்கம் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த 8 மணித்தியால உறக்கமும் நிம்மதியான உறக்கமாக அமையவேண்டும். தொடர்ச்சியாக இயங்கும் எமது கண்கள் இவ்வாறான உறக்கத்தின்போதுதான் ஓய்வுக்கொள்கின்றன.
குழந்தைகள், சிறார்களுக்கு அதிக உறக்கம் அவசியம். 3 வயதுவரையான குழந்தைகளுக்கு 12-15 மணித்தியால உறக்கம் வேண்டும். 5-12 வயதுக்குட்பட்டோர் 9-11 மணித்தியாலங்கள் உறங்கவேண்டும்.
போதிய உறக்கமில்லாதிருப்பது இதயம் தொடர்பான நோய்கள் மூலமான மரணங்களை எதிர்நோக்கும் அச்சுறுத்தலை இரு மடங்காக்குகிறது என பிரிட்டனின் வொறிக்ஷ பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உறக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள். உறக்கம் வராததால் உறங்க முடியாதவர்கள் ஒருபுறம் இருக்க, உறக்கத்திற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளாமல் பலர் உறக்கத்தை தொலைக்கின்றனர்.
சிலரின் கண்களை பார்த்தால் சிவந்துப்போய் காணப்படும். கேட்டால், 'நித்திரையில்லை, உழைக்கின்றோம்' என்பார்கள். 8 மணி நேர தொழிலை 24 மணிநேரத் தொழிலாக மாற்றிக்கொள்ளும் சிலர் ஓய்வின்றி உழைக்கின்றனர். 8 மணிநேர உறக்கம் 4 மணித்தியாலங்களுக்கு மாற்றப்படுகிறது.
இப்படி ஒரு இயந்திரத்தை போல செயற்படும் இவர்கள் காலப்போக்கில் நோயாளிகளாக மாற்றப்படுகின்றார்கள். அவர்களது கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படும். முகம் கருமையாக காணப்படும். முகத்தில் சோர்வுத் தன்மையும் காணப்படும்.
எரிச்சலைடையும் குணம், யோசனை என்பன உறக்கமின்றி இருப்பவர்களிடம் தெரியும் முதல் அறிகுறி என்கிறார் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த உளவியலாளரும் உறக்க விவகார நிபுணருமான கலாநிதி டேவிட் எவ். டின்கஸ்.
உணர்வின்மை, மந்தமான பேச்சு, ஞாபக சக்தியின்மை ஆகியனவும் உறக்கமின்மையின் விளைவாக ஏற்படலாம் என அவர் கூறுகிறார். தொடர்ந்து உறக்கமின்றி இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் திடீரென ஆழ்ந்து உறங்கத் தொடங்கிவிடுவர். விழித்திருந்தாலும் 5-10 விநாடிகளுக்கு நீடிக்கும் 'மைக்ரோ ஸ்லீப்' எனும் உறக்க நிலைக்கு உள்ளாவார் என டின்கிஸ் சுட்டிக்காட்டுகிறார். இது வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தும்.
சிந்தித்தல் அற்ற, துன்பங்கள் அற்ற, நிம்மதியான நிலைதான் உறக்கம். இவ்வாறான ஒரு உறக்கத்தை உறங்கி முடித்துவிட்டு எழும்பும் போது எமது வேலைகளை சலனமின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும். அதன் மூலம் எமக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது. துன்பங்களை மறந்து அந்த நாளை இன்பத்துடன் ஆரம்பிக்க முடியும். எமது வேலைகளை தடங்களின்றி செய்து முடிக்க முடியும். களைப்பு, சோர்வு என்பன இந்த உறக்கத்திலேயே எம்மை விட்டு விலகிப்போய்விடுகின்றன.
ஒழுங்காக உறங்குவதன் மூலம், இளமையான தோற்றத்துடன் விளங்க முடியும். உடலும் சுறுசுறுப்புடன் இயங்குகிறது. இவை நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து விடும்போது நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் என்பதை அதிகமானவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.
இந்த நிம்மதியான உறக்கத்தை நாம் தியாகம் செய்யும் போது உடல் ஆரோக்கியத்தையும் தியாகம் செய்கிறோம்.
வேலைப்பளுவுக்கும் பொழுதுபோக்கிற்கும் மத்தியிலும்கூட, உறக்கத்திற்கும் போதியளவு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு முறையாக உறங்குவது நாம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ உதவும்.
xlntgson Sunday, 12 September 2010 09:02 PM
தூக்கம் அருமருந்து தான். அதற்கு ஈடு இணை இல்லை.மருத்துவர் தூங்க சொல்லுவார் நாம் தான் தூங்கவேண்டும் மருந்து கேட்டு அடம் பிடித்தால் தூக்கமருந்தையும் எழுதிக்கொடுப்பார். அந்த தூக்கம் தூக்கம் தானா? எவ்விதமான தூண்டுதலும் இல்லாத தூக்கமே சுகமான தூக்கம். சிலர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் தூங்கமாட்டார்கள். அப்போதுதான் அவர்களது சிந்தனை கூடும் கணித மேதை இராமானுஜம் போல,சிலர் கண்ணை திறந்து கொண்டே தூங்குவார்கள். குடியில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளாக்கும் வாகன ஓட்டிகள் போல.கனவு இல்லாத தூக்கம் சுகமா?
Reply : 0 0
abdul Wednesday, 15 September 2010 07:13 PM
ஆறு மணித்தியால தூக்கமும் போதும் அது இரவென்றால்.
Reply : 0 0
abdul Wednesday, 15 September 2010 07:14 PM
ஆறு மணித்தியால தூக்கமும் போதும் அது இரவென்றால்.
Reply : 0 0
xlntgson Wednesday, 15 September 2010 09:51 PM
கனவுடனான தூக்கம் சுகமானது என்று நாம் நினைத்தாலும் கெட்டகனவுகளை பார்க்கும் போது அது உண்மை அல்ல என்று தெரிகிறது. கனவு தெய்வீக தகவல் என்று கருதுவோரும் இருக்கின்றனர். ஆனால் கண்டதையும் தின்று குடித்து படுத்தால் அவ்வாறான தேவ இரகசியம் எதுவும் வெளிப்படாது. கனவைப்பற்றிய ஆராய்ச்சி உலகில் முடிவடைய மாட்டாது. ஆனால் ஏதோ ஒரு இரகசியம்இருக்கத்தான்இருக்கிறது. மர்மக்கதைகளை படித்து விட்டு படுக்கிறவர்கள்: பேய்கனவும் விஷ பாம்பு பற்றியும் தூங்க போகுமுன் பிள்ளைகளுக்கு கூறக்கூடாது கெட்டகனவு கண்டால் ஒருவரிடம் கூறாது விட..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago