2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நோயற்ற வாழ்விற்கு இயற்கையுடன் உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடியுங்கள்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஆர்.சுகா)

பண்டையகால மக்கள்  இயற்கையான முறையில் உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து நோய் நொடிகளின்றி ஆரோக்கியமானதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று தாயின் கருப்பையிலிருந்து பிரசவிக்கும் குழந்தை முதல் பெரியோர்கள் வரை நோயெனக் கூறிக்கொண்டு வைத்தியசாலையில் நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நாம் தற்போது கைக்கொண்டு வரும் உணவுப் பழக்கவழக்கங்களே ஆகும். ஆம்... இன்றைய விஞ்ஞான யுகத்தின் வளர்ச்சிக்கேற்பவும் நேரம் வெகுவாக ஓடிக்கொண்டிருப்பதாலும் அன்றைய காலத்தவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கம் போன்று இப்போது கடைப்பிடிக்க முடிவதில்லை.

தற்போது வீட்டில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை விட கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் குளிர்பானங்கள் ஆகியவற்றையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் அளவுக்கதிகமான நிறமூட்டும் இரசாயனப் பதார்த்தங்கள், உணவு பழுதடையாமல் சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் எமது உடலில் உட்புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நோய்த் தாக்கத்தையே உண்டு பண்ணி வருகின்றன.

இவ்வாறு நிறமூட்டும் இரசாயனப் பதார்த்தங்கள், உணவு பழுதடையாமல் சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஆகியவற்றால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, சலரோகம், கொலஸ்ரோல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே, இவ்வாறான உணவுப் பொருள்களை தவிர்த்து ஓரளவுக்கேனும் இயற்கையுடன் ஒட்டியதான உணவுப் பொருள்களை உண்டு வாழ்ந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

'நோயற்ற வாழ்வே எமக்கு பெருஞ்செல்வம்'


You May Also Like

  Comments - 0

  • thevan Sunday, 17 October 2010 11:12 PM

    எமது உணவுப் பழக்கவழக்கத்தை நாம் சரியாக கடைப்பிடித்தால் எமது நோயில் முக்கால்வாசியும் குறையும். முன்னோர்களின் உணவுப் பழக்கமே அவர்களின் சுறுசுறுப்புக்கும் நீண்ட ஆரோக்கியத்திற்கும் காரணமாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .