2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

'இரண்டரை வயதுவரை தாய்ப்பால் அவசியம்'

Super User   / 2010 ஜூலை 29 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ ஜயசேகர)

முன்னிலை பால்மா இறக்குமதி நிறுவனமொன்றினால் குழந்தைகளுக்கான தமது பாலுணவுப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்குக் கையாளும் தந்திரோபாயங்கள் அநாகரிகமானவை,  முறையற்றவை எனவும் தாய்ப்பாலுக்கு ஈடான உணவு கிடையாது  எனவும் சிறுவர் மருத்துவம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் நாரத வர்ணசூரிய இன்று தெரிவித்தார்.
 

சிறுவர் வளர்ச்சியிலும் வாழ்க்கை முழுவதுமான ஆரோக்கியத்திலும் தாய்ப்பாலூட்டல் வகிக்கும் பங்கு என்ற தலைப்பில் நடத்திய விரிவுரையொன்றின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


"மனிதர்களால் தயாரிக்கப்படும் எந்தவொரு உணவுப் பொருளும் தரத்திலோ தூய்மையிலோ போஷாக்கிலோ தாய்ப்பாலுக்கு மாற்றீடாக முடியாது. 


சில தனியார் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் எந்தவொரு  பால் மாவில் கூறப்படுவதைப் போன்று மேலதிக சக்தியோ உடல் உள வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான விசேட  தன்மையோ நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றலையோ கொண்டிருக்கவில்லை.


குழந்தையின் முதல் 5 வருடங்களில் உடல் உள வளர்ச்சியே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இப்பருவத்தில் தாய்ப்பாலூட்டுவது அவசியமானது. குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு முதல் 6 மாதங்கள் பிரதான உணவாக தாய்ப்பாலூட்டுவது மிக அவசியமானது.
குழந்தையின் முதல் 6 மாத கால சுமுக வளர்ச்சிக்குத் தேவையான சகல போஷாக்குகளும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன.


குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு குறைந்தபட்சம் இரண்டரை வயதுவரை தாய்ப்பாலூட்டுவது அவசியம்.
குழந்தைகள் திண்ம உணவுகளிலிருந்து சாதாரண உணவுகளுக்கு படிப்படியாக மாறுவதற்கு  தாய்மார் பழக்க வேண்டும். ஒரே தடவையில் சாதாரண உணவுகளை உட்கொள்ள மறுத்தால் கரைக்கப்பட்ட  உணவிலிருந்து சாதாரண உணவுக்கு மாறப் பழக்க வேண்டும்" எனவும் அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • Ossan Salam - Qatar Sunday, 01 August 2010 05:38 PM

    இந்த வைத்திய நிபுணர் இப்பொழுது தான் இதனைக் கூறுகின்றார். ஆனாலும் 1430. வருடங்களுக்கு முன்னர் திருமறையில் "தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு தொடர்ந்து இரு வருடங்கள் முழுமையாக பாலூட்ட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது (பார்க்க அத்தியாயம் இரண்டு : வசனம் 233.)

    Reply : 0       0

    m.z.m subhan Monday, 02 August 2010 08:15 AM

    நேர் வழியில் இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தி உண்டஹட்டும்.
    டாக்டர் அவர்ககளால் முன் வாய்க்கப்பட்ட கருத்து அல் குர்ஆனில் 1431 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டது .அத்தியாயம் 2 வசனம் 233 நன்றி !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .