Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 04 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹே.. என் ஸோபன மன மோகன காந்த ரூபியே உன் சுந்தர தேஜஸ் கண்டு, என் பிராணன் நின் வடிவமேயானது. ஸாந்த சொரூபியான வதனமதில் அடியேன் பிரேமை கொண்டேன். நின் சித்தமும் அதுவேயாயின், நான் தன்னியனாவேன்.
உன் ஷேமம் பற்றியே என் ஹிருதயம் நினைந்து கொள்ளும். உன்னை எண்ணியபோதே, புதியதொரு ஸ்பரிசத்தை அனுபவித்தவனுமானேன். எனது அதரம் அனுதினம் உச்சரித்த வண்ணமே அடியேன் சிந்தை தடுமாறிடினும் சுகானுபவம் பெறுகின்றேன்.
பிரிய ஸகியே, என் சொப்பனத்தை சுவாசியே. பிரேமையினால் நான் நனைந்தேன். ஸங்கீத இராச்சியத்தின் தேவியே, விசித்திர சொப்பன மோகினியே, சிறு பொழுதேயாயினும் உன்னோடு சல்லாப ஊஞ்சலாட அனுமதிதர மாட்டாயா?
மேலே சொல்லப்பட்ட காதல் மொழிகளில் வட மொழியின் கலப்பு மிகையாக உள்ளது. ஒரு காலத்தில் இதுவே கையாளப்பட்டும் வந்தது.
தற்போது, எமது அழகுத் தமிழ் மொழியுடன் ஆங்கிலமும் இணைந்து விட்டது. தெளிந்த தமிழில் மட்டும் எழுத முயற்சி செய்வோமாக.
வாழ்வியல் தரிசனம் 04/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
26 minute ago
37 minute ago