Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 14 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கல்நெஞ்சக் காரனடி என்னவர்; மெல்லெனச் சிரித்து என் மோகத்தை வளர்த்து விட்டான். காதலின் வேகம், தாபம், எதுவெனத் தெரியாமல் நடிக்கின்றான். மறைந்து நின்று மறுபடி வருகின்றான். இது என்ன கூத்து? சும்மா இருந்தவளைச் சோரவிட்டு, மெய்வருந்தி நான் இருக்க, இவனுக்கு என்ன நெஞ்சழுத்தம்? புரியாமல் நோகடிக்கும் எனை நாடிய தூயவன் என்னை எப்போ அடிமை கொள்வான்?' தோழியிடம் தலைவி இப்படி முன்னர் அந்தக் காலத்தில் சொன்னாள்.
இக்காலத்தில் பெண் தன்சினேகிதியிடம் இப்படிச் சொல்லுவாள். 'யாரடி இவன் கிறுக்கன்? சும்மா என்னைச் சுற்றிச் சுற்றி வந்தான். இப்போது ஆளைக் காணவில்லை. யாரையாவது புதிசாகப் பிடித்துப் போட்டானோ? எனக்கென்ன? இதுக்காகப் பயப்பிட்டு ஏங்கி அழுகிறவள் நானில்லை. என்னுடைய வேலையை நான் பார்க்க வேணும். சரி...சரி...வாடி வகுப்புத் தொடங்கப் போகிறது. தலை நிறைய வேலை இருக்கு‚ படிக்க வேணும் வாடி கெதியாக‚'
எதனையுமே தலையில் தேக்காமல் காரியத்தில் கவனமாக இருந்தால் எவரையுமே ஏமாற்றிவிட முடியாது.
வாழ்வியல் தரிசனம் 14/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago