Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு சமயம் கொழும்பில் உலகப் பிரசித்தி பெற்ற மாய வித்தைக்காரர் பல்லாயிரம் ரசிகர்கள் மத்தியில் பலவித மாயாஜால வித்தைகளைக் காண்பித்தார்.
தன்னைக் கட்டிவைத்து அடைத்து மூடச்செய்தார். பின்னர் அவரது உதவியாளர் அவரை அழைக்க, அவரோ கூட்டத்திலிருந்த ரசிகர் மத்தியிலிருந்து எழுந்து மேடையில் ஏறினார். கூட்டத்தினர் வியப்புடன் கரகோசம் செய்தனர்.
தனது வித்தைகளை முடித்த பின்னர் மக்களிடம் இவ்வாறு சொன்னார். “இது ஒரு கலை; இப்போது பல சாமியார்கள் மக்களை ஏமாற்றுவதற்கு எதை எதையோ செய்கின்றார்கள். நான் சாமியார் அல்ல! ஆனால், இந்தச் சாமியார்கள் செய்யும் அனைத்து மோசடிகளையும் நான் அறிவேன். அவர்கள் செய்தவைகளை எனது கலை மூலம் செய்து காட்டுவேன்” என்றார்.
இனியாவது அல்ல; எப்போதுமே தங்கள் போக்கை மக்கள் மாற்றவே மாட்டார்கள்.
வாழ்வியல் தரிசனம் 10/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .