2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

வெள்ளை பூரான் தொடர்பில் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. அண்மையில் வெள்ளைப் பூரானால் கடிக்கப்பட்ட சிறு குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்க தாமதமாகியதால்  சிறுமி உயிரிழந்தார்.

மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் விஷம் நரம்பு, இதயம்,சிறுநீரகம், குருதி என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பரிவு, பரா பரிவு நரம்பு மண்டலங்களை மிகையாக தொழிற்பட வைக்கும்.

இதய அதிர்ச்சியை ஏற்படுத்தும். யாழ்ப்பாணத்தின் வலி வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்ட இந்த உயிரினம் முதன் முறையாக நானட்டான், வங்காலை பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வெள்ளை பூரான் அல்லது இனந்தெரியாத ஜந்துகளால் கடியுண்டவர்களை தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .