2025 பெப்ரவரி 27, வியாழக்கிழமை

விஷமத்தனமான அபத்தக் குற்றச்சாட்டுகள்

Freelancer   / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 12:02 - 0     - 67

நிதர்சன் வினோத்

தான் நேரடி அரசியலில் இறங்கியமையால், சில முகம் தெரியாத தரப்பினரும் பிரகிருதிகளும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு, அபத்தக் குற்றச்சாட்டுகளையும் விஷமத்தனமான - கேவலமான - புனைகதைப் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர் என்று மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் அறிக்கை ஊடாக விசனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட, பகிரங்க அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சுமார் 40 ஆண்டுகள் ஊடகப் பட்டறிவு கொண்ட நான், அரசியலில் நேரடியாக இறங்கியமையை அடுத்து, என் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் துர்நோக்கில், சில அநாமதேய சமூக ஊடகத் தரப்புகளும், ஓர் அச்சு ஊடகங்கமும் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்த் தகவல்களையும்,
ஆதாரமேயற்ற புனைகதைகளையும் பெரும் எடுப்பில் பரப்பி வருகின்றன.

என் பொது வாழ்வில் இத்தகைய அபத்தக் குற்றச்சாட்டுகள் புதியவை. யாழ். இந்து கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்று வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் யாழ். பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான குற்ற விசாரணைப் பிரிவினர், பிரதான சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர் என அறிகிறேன். அவர்
தொடர்பான சி.சி.டி.வி கமெரா பதிவுகளையும் பொலிஸார் பெற்றிருக்கிறார்கள்.

அந்தப் பிரதான சந்தேக நபர் எச்சமயத்திலும் கைதாகக் கூடும். கல்லூரி மாணவனுக்கும் கல்லூரியுடன் சம்பந்தப்படாத வெளியாள் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவத்தை, கல்லூரியை இலக்கு வைத்து பாலியல் வலை அமைப்பு இயங்குவதாகக் குறிப்பிட்டு, கல்லூரிக்கும்
நிர்வாகத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் கேவல சதி நடவடிக்கையும் ஊடகத்தின் பெயரால் தொடர்ந்து அரங்கேறுவது துரதிர்ஷ்டமாகும்.

இந்தச் சம்பவம் குறித்து தங்கள் அடையாளத்தையோ பொறுப்பு கூறலையோ
வெளிப்படுத்தாமல், ஊடக அதர்மத்தை பிரதிபலிக்கும் இந்தப் பிரகிருதிகளை

தங்கள் செய்திக்கான ஆதாரத்தை வெளிப்படுத்தி, உண்மைத் தன்மையை நிரூபிக்கும் படியும் பகிரங்க சவால் விடுக்கிறேன்.

தங்கள் செய்தி திட்டமிட்டு பரப்பப்படும் விஷமத்தனமான வதந்தி என்பதை நன்கு அறிந்திருந்தும், 'பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன' என அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் வதந்திகளை அந்த ஊடகம் வெளியிடுவதும், அதை பொலிஸ் தரப்பு பார்த்திருப்பதும், இத்தகைய அதர்ம, அவதூறு, பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பொலிஸ் தரப்பும் கூட பின்னணியும் காரணமுமா என்ற நியாயமான சந்தேகமும் எழுகின்றது என்று அறிக்கையில் உள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .