2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை, ஒட்டுசுட்டான் வீதி, கூழாமுறிப்பு பகுதியில், நேற்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

முள்ளியவளை -  01 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் சிவரூபன் (வயது 30) என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கீச்சுக்குளம் - கூழாமுறிப்பு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், யோகலிங்கம் சிவரூபன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றுமோர் இளைஞன் ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .