2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட பாரிய எண்ணை தாங்கி மீட்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.

காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜாவின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 16.3 அடிநீளமும், 7.9அடி விட்டமும் கொண்ட பாரிய இரும்பு எரிபொருள் தாங்கி ஒன்று எரிபொருட்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியை புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் கொண்டு சென்று பாதுகாக்குமாறும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் பணித்துள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X