2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

வவுனியாவில் குளவி கொட்டியதில் 40 பேர் பாதிப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 
 
வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில்  மாணவர்கள் உட்பட ஆசிரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இன்று (17)  காலை பாடசாலை பிரார்த்தனையில் ஈட்பட்டிருந்தபோது பாடசாலை கட்டிடத்தில் காணப்பட்ட குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது. 
 
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட ஆசிரியர்களில் 12 பேர் பதவிய வைத்தியசாலையிலும் 3 பேர் மாமடு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந் நிலையில் பாடசாலையில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்றுவதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்காமையே இவ்வனர்த்ததுக்கு காரணம் என பெற்றோர் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X