2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

மூன்றாம் கட்ட நிவாரணப்பொருட்களும் வந்தடைந்தன

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கர், சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100, 000 கிலோகிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா  பொதிகள் கனரக வாகனமொன்றில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நேற்று(04) காலை வந்தடைந்துள்ளன. 

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 3,100 குடும்பங்களுக்கு அரிசியும் 1,044 குடும்பங்களுக்கு பால்மாவும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 900 குடும்பங்களுக்கு அரிசியும் 305 குடும்பங்களுக்கு பால்மாவும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 600 குடும்பங்களுக்கு அரிசியும் 205 குடும்பங்களுக்கு பால்மாவும், ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 1,600 குடும்பங்களுக்கு அரிசியும் 540 குடும்பங்களுக்கு பால்மாவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 3,000 குடும்பங்களுக்கு அரிசியும் 1,011 குடும்பங்களுக்கு பால்மாவும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 800 குடும்பங்களுக்கு அரிசியும் 270 குடும்பங்களுக்கு பால்மாவும் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உணவுப்பொருட்கள் வந்தடையாததால் ஏனைய ஐந்து பிரதேசங்களுக்கான நிவாரண பொருட்கள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதேச செயலகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X