Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
ஓ.எம்.பி அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! தந்திரமாக திருட்டுத்தனகமாக உள்ளே சென்ற அதிகாரிகள்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் களேபரம்
காணாமல் போனோர் அலுவலகத்தினால் முல்லைத்தீவில் விசாரணைகள் நடத்துவதற்காக 19ஆம் திகதி இன்றும் 20ஆம் திகதி நாளையும் 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளை உள்ளே செல்லவிடாது தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனை மீறி தந்திரமாக திருட்டுத்தனகமாக உள்ளே சென்ற அதிகாரிகள் விசாரணைகளை நடத்திய போது திடீரென உள்ளே நுழைந்து சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் குழப்பநிலை ஏற்பாட்டு பொலிஸார் வரவழைக்கப்பட்டு உறவினர்கள் வெளியேற்றப்பட்டபோது கடும் வாக்குவாதமும் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது.
காணாமல் போனோர் அலுவலகத்தினால் இன்றும் நாளையும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என்றும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்
இந்நிலையில் இன்று (19) காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்க வந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளே செல்லவிடாது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆணையாளர் ஒருவர் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மற்றுமொரு வாகனத்தில் வந்த ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மாவட்ட செயலகத்தின் வெளியேறும் வழி ஊடாக உள்ளே சென்ற நிலையில் மக்கள் உள்ளே சென்று அதிகாரிகளை வெளியே சென்று, மக்களுக்கு பதிலளிக்குமாறு தெரிவித்து அனைவரையும் வெளியே அழைத்தனர்
இந்நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் வருகைதந்து எதிர்ப்பில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது பல்வேறு காரணங்களை தெரிவித்து உங்கள் விசாரணை தேவையில்லை என்றும் உங்களை நம்புவதாக இருந்தால் நாம் ஏற்கெனவே உங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த விபரங்களில் ஐந்து நபர்களுக்கு அல்லது இங்கு இருந்து கையளிக்கப்பட்ட சிறுவர்கள் பதினாறு பேரை கொண்டுவந்து காட்டுங்கள் நாங்கள் உங்களை நம்பி வந்து பதிவுகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இன்று விசாணைகள் நடத்தாது பூரண எதிர்ப்பினை வெளியிட்டனர். இந்நிலையில் அதை ஏற்று அதிகாரிகள் விசாரணை செய்யவில்லை என்று தெரிவித்துவிட்டு மாவட்ட செயலக வளாகத்துக்குள் சென்றுள்ளனர்.
அங்கு சென்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி விசாரணைக்காக சென்றிருந்த சிலருக்கு விசாரணைகளை ஆரம்பித்தனர். இதையறிந்த உறவுகள் மீண்டும் விசாரணை நடந்த இடத்துக்குள் நுழைந்து அங்கு விசாரணைகளில் ஈடுபட்டகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து பொலிஸார் வரவளைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டபோது அங்கு கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
எனினும், தொடந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் ஐந்து பேர் மாத்திரமே இதுவரை விசாரணைக்காக சென்றுள்ளனர் இருப்பினும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விருப்பவில்லை
காணாமல் போனவர்களை விசாரணைக்கு அழைத்து விட்டு பொலிஸாரை கொண்டு விரட்டியடிக்கும் இவர்களா? எமக்கு நீதி பெற்று தரப்போகிறார்கள் எனவும் அணையாளர்களே! இவ்வாறு பொய்களை சொல்லி ஏமாற்றும் பொது இவைகளை எவ்வாறு நம்புவது எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கு தீர்வு எனவும் உறவுகள் தெரிவித்தனர்.
இதேவேளை, அதிகளவான பொலிஸார், புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் செயப்பாடுகளையும் முன்னெடுத்தனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் 19.12.2022 அன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 29 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 16 பேருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 37 பேருக்கும்,துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 08 பேருக்குமாக 122 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
20.12.2022 அன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 10 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 28 பேருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 39 பேருக்கும்,துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13 பேருக்குமாக 122 பேருக்குமாக 244 பேருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago