2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’முசலியில் தொற்றாளர்கள் அதிகரிப்பு’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர பகுதியில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்து காணப்படுவதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

எனினும், முசலி பிரதேசத்தில், தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் எனவும், அவர் கூறினார்.

மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், நேற்று (8) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் குடும்ப உறவுகள் அதிகமானோர், தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர் என்றார்.

இது சமூகத்தில் வைரஸின் அளவு அதிகரித்து செல்வதற்கு ஓர் அறிகுறியாக உள்ளதெனத் தெரிவித்த அவர், பரிசோதனைகளின் போது கணிப்பிடப்படுகின்ற சி.ரி பெறுமானமும் குறைவடைந்து வருவதாகவும் கூறினார்.

எனவே, பொதுமக்கள் இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, மிகவும் அவதானத்தோடும், விழிர்ப்புணர்வுடனும் சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும், வைத்தியர் டி.வினோதன் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .