2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மீண்டும் தலைவராக அன்னலிங்கம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவுக்கான கூட்டம், கூட்டுறவு சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில், முல்லைத்தீவு மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.சிவகுமார் தலைமையில், அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக சங்கத்தை வழிநடத்திய வ.அன்னலிங்கத்தை, சங்கத்தின் யாப்புக்கமைய மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அதைதொடர்ந்து, உப தலைவராக தா.சண்முகநாதன், நிர்வாக உறுப்பினர்களாக க.பூபதிராஜா, செ.பாலசிங்கம், பொ.தயாபரன், திருமதி சு.கலைச்செல்வி, திருமதி அ.விஜயதர்சினி, திருமதி இ.மேரிகலிஸ்ரா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .