Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 06 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட காரணத்தினால் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்துள்ளான்.
இதனால் குறித்த மாணவன் பாடசாலை செல்லவில்லை என்ற காரணத்தினால் அந்த மாணவனை தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதவிடாது பாடசாலை சமூகம் தடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் தரம் 5 இல் கல்விகற்ற மாணவனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவனது சகோதரி தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி கற்று வருகின்றார்.
குறித்த மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார் படுத்தியுள்ளார்கள். இதன்போது குறித்த மாணவனக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை அதற்கான மருத்துவஅறிக்கையினையும் பெற்றோர்கள் காட்டியுள்ளார்கள்.
இந்த நிலையில் புலமை பரிசீல் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருக்கி வந்த வேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து குறித்த மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர்கள் முறையிட்ட போது மாணவன் 70 புள்ளிகளுக்கு கீழ்த்தான் பரீட்சைகளில் புள்ளி எடுக்கின்றார். இது போதாது புலமை பரிசில் பரீட்சை முக்கியமில்லை. அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாக்கியுள்ளது.
பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதாசாரத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காக ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாணவன் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்போது பாடசாலை போவதற்கு விருப்பம் அற்ற நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் யாரிடமும் முறையிட முடியாத நிலையில் இந்த தகவல் முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு கிடைக்கப்பெற்று குறித்தவீட்டிற்கு சென்று சம்பவத்தினை நேரடியாக விசாரித்து இது தொடர்பிலான செய்தி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது அவனை தடுப்பது என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும்.
இது தொடர்பில் கல்வித் திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ,சிறுவர் உரிமை தொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த கஸ்டப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago