Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டச் செயலக ஏற்பாட்டில், மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு, மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று ( 26) நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள் மற்றும் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்கள் தமது திறன்களை அடையாளம் கண்டு, அதனூடாக தமக்கு பொருத்தமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தொழிற் சந்தையின் முக்கிய விடயமாக பயிற்றுவிக்கப்பட்ட வளவாளர்கள் ஊடாக திறன்களை அடையாளம் காணப்பட்டு, அதற்கான வழிகாட்டலினூடாக ஒவ்வொருவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, உயர் கல்வியினூடாக தமது எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இளைஞர் - யுவதிகள் தமது உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் சுமார் 40க்கும் அதிகமான உள்நாட்டு - வெளிநாட்டு மற்றும் உயர் கல்வி வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், வியாபார ஊக்குவிப்புச் செயற்பாடுகள் உடன் தொடர்புடைய நிறுவனங்கள் எனப் பல தரப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.
மேலும், வேலை வாய்ப்பு குறித்த வீதியோர நாடகம் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago