Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை தொடர்பில், இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது பிரதேசசெயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய நடவடிக்கை மேற்கொண்ட புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
இச் செயற்பாடு தொடர்பான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
குறித்த பொலிஸ் அதிகாரியும் அவருடன் இருந்த பொலிஸ் அல்லாத நபர்களும், தொலைபேசி அழைப்பிலிருந்த ஒருவரது வழிகாட்டலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையை சமூக வலைத்தளங்கள் மூலம் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பான விளக்கத்தைக் குறித்த அதிகாரி பகிரங்கமாகத் தெளிவு படுத்த வேண்டும். என்ற மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“இலங்கை நிர்வாக சேவையின் உத்தியோகத்தருக்கு எதிராக புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பழிவாங்கல் மற்றும் சேவைக்கு வேண்டுமென்றே அபகீர்த்தியை ஏற்படுத்தியமை தொடர்பாக இலங்கை நிர்வாக சேவைச் சங்க வடமாகாணக் கிளையின் கண்டனம்.
2022.07.30 சனிக்கிழமை முறையான தேடுதல் ஆணையின்றிப் பிரதேச செயலாளரை வற்புறுத்தி, புதுக்குடியிருப்புப் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரத் அவர்களால் தேடுதல் மேற்கெள்ளப்பட்டு, அரச கட்டடத்துக்குள்ளிருந்த பொருட்கள் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டிருந்ததோடு, பொருத்தமற்ற வகையில் தன்னிச்சையான ஊடக அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி, தான் மட்டுமின்றித் தன்னுடன் சமூகமளித்திருந்த ஊடகவியலாளர் மற்றும், சில நபர்களையும் அரச அலுவலகக் கட்டடத்துக்குள் நுழைந்து தேடுதல் நடாத்த அனுமதித்திருந்தார்.
எந்தவித நியாயப்படுத்தக் கூடிய காரணங்கள் இல்லாமல் அதிகார துஸ்பிரயோகமாக பிரதேச செயலாளரது உத்தியோகபூர்வ வதிவிடத்தினை முழுமையாக சோதனை இட்ட போது ஊடகவியலாளர் மற்றும் குழுவினரையும் உள்ளே அனுமதித்து புகைப்படம் எடுத்தமை மூலம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெயகாந்த் (இலங்கை நிர்வாக சேவை தரம் - ஐ) அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டதுடன் இச்செயற்பாடு இலங்கை நிர்வாக சேவை அலுவலர்கள் அனைவருக்கும் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் வடமாகாண கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த நடவடிக்கை மேற்கொண்ட புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
இச் செயற்பாடு தொடர்பான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
குறித்த பொலிஸ் அதிகாரியும் அவருடன் இருந்த பொலிஸ் அல்லாத நபர்களும், தொலைபேசி அழைப்பிலிருந்த ஒருவரது வழிகாட்டலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையை சமூக வலைத்தளங்கள் மூலம் அவதானிக்க முடிந்தது. இது தொடர்பான விளக்கத்தைக் குறித்த அதிகாரி பகிரங்கமாகத் தெளிவு படுத்த வேண்டும்.
மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக சேவைச் சங்கம், வடக்கு மாகாண கிளை இன்று (2022.08.08) சுகவீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் காலதாமதம், வடமாகாண இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராகிய எமக்கு மிகுந்த மனவுளைச்சலை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களுக்கான சேவை பாதிப்படையவும் வழிவகுக்கும் என்பதனை மனவருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்” (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago