Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியோரத்தில் நின்றிருந்த 71 வயதான முதியவர் மீது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதன் பின்னர் மரணமடைந்தார். சம்பவத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
இந்த சம்பவம் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு அண்மையிலேயே இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. இதில், மன்னார் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேச மக்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண்பட்டதால், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
எனினும், அந்த பஸ் சம்பவ இடம்பெற்ற இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனத் தெரிவித்த மன்னார் தலைமையக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரொசேரியன் லெம்பட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .