2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பழைய பொருளுக்கு புதிய விலை; ரூ.16 இலட்சத்துக்கு மேல் அபராதம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா மாவட்டத்தில் பழைய பொருட்களுக்கு புதிய விலையை மாற்றம் செய்து விற்பனை செய்தமை தற்காலத்தில் அதிக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி அ.லெ.ஜெஃபர்ஷாதிக் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 16 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ் வருடத்தில் பல சுற்றிவளைப்புகளையும், சோதனை நடவடிக்கைகளையும் வவுனியா மாவட்டத்தில் மேற்கொண்டிருந்தோம். ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 322 வழக்குகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 292 வழக்குகள் பதியப்பட்டு 16,33,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 48 வழக்குகள் பிடிக்கப்பட்டு, 37 வழக்குகள் பதியப்பட்டதுடன், 1,51,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப் பத்திரத்தை காட்சிப்படுத்தாது பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் பொருட்களை பதுக்கி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .