Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 14 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
பூநகரிச் சந்தைகளில் பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவூட்டினர்.
பூநகரிப் பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பலசரக்குக் கடைகளின் களஞ்சியப் பகுதி மற்றும் விற்பனைப் பகுதிகளில் மாசடையும் வகையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும் பழவிற்பனை நிலையங்கள் சோதனையிடப்பட்டபோது, அங்கு பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுத்தும் இரசாயனங்கள் தெளிகருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த பழ வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago