Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பஸ் தரிப்பிட பகுதியில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாது சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகளுக்கு, நாளை (28) முதல் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாதென, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில் வைத்து, இன்று (27) காலை, மன்னார் மாவட்ட தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் மன்னார் பஸ் தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகள் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago