Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 29 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெலிஓயா, மாந்தை கிழக்கு, துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகரித்த சிறுநீரக நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கான காரணம் இங்குள்ள நிலத்தடி நீரில் காணப்படுகின்ற பார உலோகங்கள் என்றும் சுகாதார தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை தவிர புதுகுடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 0.51 வீத மக்களுக்கும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 0.14 வீத மக்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 0.07 வீதமான மக்களுக்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாராந்தம், மாதாந்தம் யாழ்ப்பாணம், வவுனியா அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு கடும் சிரமங்களுக்கு மத்தியில் குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்கு சென்று வருகின்றனர் என்றும் சுாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இப் பிரதேசங்களில் உள்ள மக்களை சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனில் குடிப்பதற்கு உகந்த நீரை வழங்க வேண்டும் என்றும் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
43 minute ago
3 hours ago