Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 22 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர். லெம்பேட்
மன்னார் - உப்புக்குளம், நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,
மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Apr 2025
18 Apr 2025