Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு, தொட்டியடி, நாச்சிகுடா ஆகிய பகுதிகளில் விழயாழக்கிழமை (08) வீசிய கடும் புயல் காரணமாக வாழைச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழைச்செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் காற்றின் காரணமாக வாழைச் செய்கை அழிவடைந்து வந்த நிலையில், இந்த வருடம் அழிவு இல்லை என எண்ணியிருந்தபோது, திடீரென்று ஒருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெரும் அழிவு ஏற்பட்டு உள்ளதாகவும் இவ்வாழைகளில் இருந்து பெறவேண்டிய வாழைக்குலைகள், தற்பொழுது கால்நடைகளுக்கு தீவனமாக போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக அழிவடைந்து, நிர்க்கதியாக நிற்கும் நிலை எற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இம்முறையாவது தமக்கு நட்ட ஈட்டைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago