Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுணாவில் ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரவுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தொல்பொருள் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சுமைதாங்கி முற்றாக அழிவடைந்துள்ளது.
இவ்விடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், குடிநீர்க்கிணறு என்பன காணப்படுகின்றன.
இவ் விபத்தினால் நொறுங்கிய சுமைதாங்கியின் கற்களை நுணாவிலில் வசிக்கின்ற தனிநபர் ஒருவர் உழவு இயந்திரத்தின் மூலம் முற்றாக அள்ளிச் சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அப்பகுதியில் இருந்து பொலிஸாரால் கொண்டு செல்வதற்கு முன்னரேயே விபத்தினால் இடிந்த சுமைதாங்கி கற்களை சுமைதாங்கி ஒன்று அவ்விடத்தில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமால் பொலிஸார் முன்னிலையிலேயே அகற்றியமை அப்பகுதி மக்ஙளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்த கற்களை பொதுமக்கள் பொலிஸார் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே குறித்த நபர் அள்ளிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபைக்கு உடனடியாக அறிவித்தும் குறித்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட எவரும் வருகை தரவில்லை.
இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மூலமாக தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து தொல்பொருள் திணைக்களத்தினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago
24 Nov 2024